Wednesday, February 25, 2009

எண்ணவோட்டம்

அன்புடையீர், ...........



தற்போது இந்த வலைத்தளத்தில் என்னவெல்லாம் பதிக்கலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் நான் இருக்கிறேன். சில வலைதளங்களைப் பார்த்த போது ஆச்சரியமும், பல வலை தளங்களைப் பார்த்த போது ஆயாசமும் ஒருங்கே தோன்றினாலும் ......... புத்தகங்களுக்கு தங்களை படைப்புகளை அனுப்பிவிட்டு, கடிதத்தை எதிர்பார்தது காத்திருக்கும் நெடியதொரு கையறு காலங்களை தற்போதைய தலைமுறை தவிர்த்து விட்டிருக்கிறது. மட்டற்ற மகிழ்ச்சி. நாம் நல்லன என நினைப்பதை மற்றவருக்குச் சொல்வோம். தவறெனத் தோன்றுவதை கடிதொச்சி மெல்ல எறிவோம்.



பல ஆண்டுகளாக என் காகித அடுக்குகளிலும், கடினமான ஆனால் ஈரக்கசிவுள்ள மனதின் நேசம் கசியும் அந்தரங்க மன பதிவு அடுக்குகளிலும் பொதித்து வைத்திருக்கும் கவிதைகளை, சிறுகதைகளை, நெடுங்கதைகளை வெளியிடலாமா ? வேண்டாமா ? என்கிற மனப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.



எதுவாயினும் சில தினமே !



அதுவரை தங்களின் அன்புள்ள



ஜனா சிதம்பரம்

2 comments:

  1. Anonymous4:40 PM

    Welcome :-)

    ReplyDelete
  2. தைரியமாய் எழுதிடுங்கள் பார்த்திடலாம் ஒரு கை
    வாழ்த்துக்கள்
    இனியன் பாலாஜி

    ReplyDelete